"பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள தயார்" - ரிசர்வ் வங்கி கவர்னர்
பணவீக்கம் உச்சத்தை எட்டினாலும், விரைவில் குறையும் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில் மூன்று நாட்கள் நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் கொள்கைக் கூட்ட முடிவுகளை ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் இன்று வெளியிட்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், பணவீக்கத்தை கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய ரிசர்வ் வங்கி செய்யும் என்று கூறினார்.
இந்திய ரூபாயின் மதிப்பை நிலையாக வைத்திருக்கவும், அந்நிய செலாவணி கையிருப்பைப் பயன்படுத்தி இந்திய ரூபாய் மதிப்பீட்டின் ஏற்ற இறக்கத்தைக் கட்டுப்படுத்தவும் ரிசர்வ் வங்கி கவனம் செலுத்தி வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
Comments